கவலைபடாதீங்க…. நிம்மதியா தூங்குங்க….. ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் அட்வைஸ்…!!

கவலைபடாமல் தூங்குங்க என்று திமுக தலைவர் முக.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ் செய்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர்  ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது ,  நாட்டின் பொருளாதார நிலை என்பது தற்காலிகமானது.நிறுவனங்கள் வரும். முதலமைச்சர் முதலீடு கொண்டு வருவார். எதையும் தெரியாதவர்கள் , எதையும் படிக்காத்தவர்கள்  சும்மா காழ்ப்புணர்ச்சி காரணமாக கருத்து சொல்வார்கள்.

ஸ்டாலினை பொருத்தவரையில் முதலமைச்சரின் கனவு தான் அவரோட கனவு. இன்னும் இரண்டு வருஷம் இருக்கும். நிம்மதியா தூங்குங்க. எங்க அரசு மக்களை நன்றாக பார்த்துக் கொள்ளும். 2021 எலக்சனைசந்திப்போம் நாங்களும் நிக்குறோம் , நீங்களும் நில்லுங்க  வருத்தப்படாதீர்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.