ஜூம் செயலியை காணொலி காட்சி சந்திப்பிற்கு பயன்படுத்த வேண்டாம் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

ஜூம் செயலியை காணொலி காட்சி சந்திப்பிற்கு பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுதுவம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வொர்க் ஃப்ரம் ஹோம், மற்றும் முக்கிய ஆலோசனைகளுக்கு வீடியோ கால் இன்றியமையாததாக உள்ளது. வீடியோ கால் செய்ய பலரும் ஜூம் (Zoom) என்ற சாஃப்ட்வேரைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். இது பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். வீடியோ மீட்டிங்குகள், ஆடியோ கால்கள், பிரைவேட் சாட்கள் என அனைத்து விஷயங்களையும் இந்த ஒரே செயலியில்பெறலாம்.

இதற்கு புதிதாகக் கணக்கு தொடங்க வேண்டிய தேவை இல்லை, எளிதாகப் பயன்படுத்தலாம் என்பதும் பலரும் இதை உபயோகிக்கக் காரணமாக இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஜூன் செயலியை பலரும் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த நிலையில் ஜூம் செயலியை காணொலி காட்சி சந்திப்பிற்கு பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவால் அனைத்து வித அரசு ஆலோசனைகளும் காணொலி காட்சி மூலம் நடைபெற்று வருகிறது.

இதற்கு பலரும் ஜூம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஜூம் (Zoom) செயலியில் எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்சன் கடைப்பிடிக்கப்படுவதில்லை. டிஎல்எஸ் (TLS) என்ற முறையில்தான் ஜூம் மூலம் மேற்கொள்ளப்படும் கால்கள் மற்றும் தரவுகள் பாதுகாக்கப்படுகின்றன.

சமீபத்தில் ஜூம் பயன்பாட்டை ஹேக்கிங் செய்வதிலிருந்து கிடைக்கும் தகவல்களை ஹேக்கர்கள் இப்போது இணையத்தில் விற்பனை செய்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது. பயனர்களின் வெப்கேமில் துவங்கி, மைக்ரோஃபோன், பயனரின் கடவுச்சொற்கள், மின்னஞ்சல்கள் மற்றும் பயனர் சாதனத்தின் தகவல்கள் உட்படக் கருவியுடன் இடையில் உள்ள அனைத்து ஒருங்கிணைந்த தரவுகளும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ஜூம் செயலியை காணொலி காட்சி சந்திப்பிற்கு பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *