கொரானா வைரஸில் இருந்து தப்பிக்க இந்த மாத்திரைகளை உபயோகிக்க வேண்டாம்; WHO வேண்டுகோள் .!!

சீனாவில்உருவான  கொரோனா வைரஸ் அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய பின்னர்  உலகெங்கும் பரவியுள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.

இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இந்த வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 141 பேர் இந்தியர்கள், 25 பேர் வெளிநாட்டினர்கள் ஆவர்.

இந்நிலையில் தீவிரமடையும் COVID -19 வகை கொரானா வைரஸுக்கு ibuprofen மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என WHO வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதை எடுத்துகொள்வதால் வைரசின் செயல்பாட்டை மோசமானதாக மாற்றிவிடும் என ஏற்கனவே பிரான்ஸ் அறிவித்துள்ளது.