“மதுபோதை” வாகன ஓட்டிகளை பரிசோதிக்க வேண்டாம்…… தமிழக அரசு எச்சரிக்கை…..!!

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மதுபோதையில் வாகனம் ஒட்டி வருபவர்களை சோதிக்க வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடூரமான வைரஸ் நோய் என்றால் அது கொரோனா வைரஸ் நோய் தான். இதனுடைய தாக்கம் உலக மக்களிடையே பெரும் அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில், இந்த வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை படிப்படியாக ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், பல்வேறு மாநிலங்களில் இதிலிருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிமுறைகள் விதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி,

தமிழக அரசு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வரும் நபர்களை காவல்துறையினர் பொதுவாக ப்ரீத்திங் அனலைசர் என்னும் கருவியைக் கொண்டு வாயை அதில் வைத்து ஊத கோரி அறிவுறுத்தி அவர்கள் மது அருந்தி  இருக்கிறார்களா ?இல்லையா ? என்பதை கண்டுபிடிப்பர்.

ஆகையால் ஊதா சொல்வது, அனலைசர் கருவியைப் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை செய்வதால் சுவாசம் மூலம் பரவும் என்பதால் மதுபோதையில் வரும் வாகன ஓட்டிகளை இம்மாதிரியான முறையில் சோதிக்க வேண்டாம் என என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.