“இந்த உணவுகளை சாப்பிடாதீங்க”… நோய் எதிர்ப்பு சக்தி குறையும்… ஆய்வு கூறும் தகவல்..!!

நோய் எதிர்ப்பு ஆற்றலை குறைக்கும் இந்த வகையான உணவுகளை சாப்பிடும் போது ஜாக்கிரதையாக இருங்கள்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது ஒரே நாளில் உருவாவது அல்ல. நாம் உண்ணும் உணவு பழக்கவழக்கங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் ஆற்றல். கடந்த ஓராண்டாக உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்குதலுக்குப் பிறகு நாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், பல உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் சில உணவுகள் நாம் சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் என்பது தான் உண்மை. அது குறித்து இதில் பார்ப்போம்.

கொரோனா  நோய்தொற்று காலத்தில் மது குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கூறப்பட்டது. அது உண்மை அல்ல. உண்மையில் மது அருந்தினால் நோய் எதிர்ப்புசக்தி குறைகிறதாம். பழ சாருக்களைஅருந்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். ஆனால் உப்பை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் நம் உணவும் குப்பைக்கு தான் சென்றுவிடும். அதிக அளவில் உப்பை சேர்த்தாலும் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்று ஆய்வுகள் சொல்கின்றது.

உடல் சோர்வை போக்குவதற்காக அடிக்கடி டீ காபி போன்ற தேநீரை நாம் அருந்துகிறோம். இதன் மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.

சக்கரை நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஒரு நாளைக்கு நாம் சர்க்கரை இல்லாமல் நமது வாழ்க்கை கடந்து போகவே முடியாது. நாள் ஒன்றுக்கு 20 கிராம் முதல் 30 கிராம் வரையிலான சர்க்கரையை எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி சீராக இருக்கும்.

ஐஸ்கிரீம் போன்ற உணவுகளை நாம் எடுத்துக் கொண்டாலும், நமது உடலுக்கு கேடுதான். இதன் மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.

மிட்டாய்கள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஸ்வீட் எடுத்துக்கொள்வதன் மூலமும் நமது உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.

போதுமான அளவு பச்சை காய்கறிகளை நம் உணவில் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதேபோல் நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும் அதிக அளவில் எடுத்துக்கொண்டால் பிரச்சனைதான் நாளொன்றுக்கு 25 கிராம் அளவுள்ள நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

மைதா மாவு மற்றும் கோதுமை மாவுடன் செய்யப்படும் ரொட்டி வகைகள் ஆகியவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ளாதீர்கள். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.

சிப்ஸ் வகைகளை எண்ணெயில் பொரித்த உணவுகளை நாம் சேர்க்கும் போதும் நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது.

எனவே உணவுகளை பார்த்து என்ன சாப்பிட வேண்டும், எதை சாப்பிட கூடாது என்பதை உணர்ந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *