திமுக_வின் தேர்தல் அறிக்கையை முக.ஸ்டாலின் வெளியிட்டார்…!!

திமுக_வின்  தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டார்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக 20 தொகுதிகளிலும் , கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது. போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்படட நிலையில் திமுக_வின் தேர்தல்  அறிக்கையை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்காக டிஆர் பாலு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு இருந்தது . அந்தக் குழுவில் துணைப் பொதுச் செயலாளர் வி. பி துரைசாமி , சுப்புலட்சுமி ஜெகதீசன் , கொள்கை பரப்புச் செயலாளர் ஆர் ராசா , திருச்சி சிவா போன்ற முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தார்கள்.இவர்கள் கடந்த  மே மாதம் தேர்தல் அறிக்கையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள் .

Image result for திமுக அறிக்கை

தேர்தல் அறிக்கை குறித்து பொதுமக்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கை வரைவு தயார் செய்யப்பட்டு கடந்த மார்ச் 1_ஆம் தேதி  திமுக தலைமையிடம் கொடுக்கப்பட்டது . அந்த வரைவு தேர்தல் அறிக்கையை ஆய்வு செய்து அதில் சில அம்சங்களை சேர்ப்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான தலைமையில் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்று  , வரைவு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட புதிய அம்சங்களை சேர்த்து அந்த பின்னர் அந்த தேர்தல் அறிக்கை இறுதி செய்யப்பட்ட்து. இந்நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள  கலைஞர் அரங்கத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் .