“திமுக வெற்றிபெற்றால் காஞ்சிபுரத்தில் தொழில் வளத்தை பெருக்க நடவேடிக்கை ” திமுகவின் அசத்தலான தேர்தல் நலத்திட்டங்கள்!!…

உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்தால் காஞ்சிபுரத்தில்தொழில் வளம் பெருக்க முயற்சி திமுக வேட்பாளர் உறுதி,

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்  

 

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை  தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு அந்த தொகுதிக்குட்பட்ட அம்பத்தூர் பகுதியில் வீதி வீதியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது,

மக்கள் நலனை மட்டுமே சிந்திக்க கூடிய  கட்சியாக திராவிட முன்னேற்ற கழகம் திகழ்கிறது . எண்ணற்ற பல நல்ல திட்டங்களை திமுக தனது ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளது.

மேலும் அம்பத்தூர் பகுதியில் புதிய ரயில் நிலையம் ஒன்றை அமைக்க திமுக திட்டம் தீட்டியுள்ளது  . இதன் மூலம் தொழில் வளம் பெருக வாய்ப்பு உள்ளது .மத்தியில் நிலையான நல்லாட்சி ஆட்சி அமைய உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று  பேசினார்.

வேட்பாளர் டி.ஆர்.பாலுவை  அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும் அப்பகுதி சிறுவர்கள் கலைஞர், பெரியார் உள்ளிட்ட. தலைவர்களின் வேடம் அணிந்து வரவேற்றனர். இதனை கண்டுகளித்துவிட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வேட்பாளர் வாக்கு சேகரித்தார்