“ரூ 10,00,000 பறிமுதல்” அதிர்ச்சியில் திமுக_வினர்….. தொடரும் சோதனை…!!

துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திமுக பொருளாளரும் , முன்னாள் அமைச்சருமான துரைமுருகனுக்கு வேலூரில் உள்ள  காட்பாடியில்  உள்ள அவரின் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும்படை  அதிகாரிகள் நேற்று இரவு சோதனை நடத்தினர். இதையடுத்து அந்த பகுதியில் திமுக_வின் தொண்டர்கள் மற்றும் திமுக_வின் வழக்கறிஞ்சர்கள் துரைமுருகன் வீட்டின் முன்பாக கூடினர் . இதனால் திமுக தரப்பினருக்கும் ,  சோதனை செய்ய வந்தவர்களுக்கும்  நள்ளிரவு நேரத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது . இதையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சிறிது நேரம் கழித்து சோதனையை தொடங்கினர்.

துரைமுருகன் க்கான பட முடிவு

இதையடுத்து திமுக பொருளாளர்  துரைமுருகன் வீட்டில் இரவு தொடங்கிய சோதனை சுமார் 5.30 மணி நேரம் நடைபெற்றது. இந்த சோதனையில் அதிகாரிகள் 2 பைகளில் ஆவணங்களை எடுத்துச்சென்றதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் , துரைமுருகன் தேர்தல் வேட்புபண மனுத்தாக்களில் கையில் இருப்புத்தொகையாக வைத்துள்ள பணம் குறித்து தவறான தகவலை வெளியிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டதை விட கூடுதலாக வைத்திருந்த 10 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் பண்ணை வீடு மற்றும் கல்லூரிகளில் சோதனை நடப்பது குறிப்பிடத்தக்கது.