காஷ்மீர் விவகாரம் : டெல்லியில் இன்று திமுக போராட்டம்….!!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்து கடந்த 6_ஆம் தேதி மத்திய அரசு அதற்கான மசோதாவை நிறைவேற்றியது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும்  லடாக் என்ற யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.மேலும் அங்குள்ள முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Image result for kashmir

மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசாங்கம் பிறப்பித்துள்ளது.காஷ்மீரில் மத்திய அரசின் விவகாரம் குறித்து கடந்த 19_ஆம் தேதி திமுக தலைவர் முக.ஸ்டாலின் அதிரடி அறிக்கை ஒன்றை பிறப்பித்தார். அதில் , காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை பாஜக ஏற்படுத்தியுள்ளது. தலைவர்களை விட்டுச் சிறையில் வைத்து பேச்சுரிமை , அடிப்படை உரிமை ஆகிய அனைத்தையும் மத்தியஅரசு பறித்துள்ளது  என்று  சுட்டிக்காட்டி டெல்லி ஜந்தர் போராட்டத்தில் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

Image result for மகன் உமர் அப்துல்லா , முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி

அக்கட்சியின் மக்களவை குழு தலைவர் TR.பாலு முன்னிலையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து கட்சி எம்பிக்களும் பங்கேற்க வேண்டு மென்றும், திமுக கூட்டணி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்ப்பார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.