இனி காஷ்மீரிலும் திமுக சொத்துக்களை வாங்கிவிடும்… அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!!

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து திமுகவினர் இனி அங்கேயும் சொத்துக்களை வாங்கி குவிப்பார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

காஷ்மீர்  மாநிலத்தின்  சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ரத்து செய்யக்கோரிய மசோதாவுக்கு ஆதரவு மற்றும் எதிரான கருத்துக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். தற்பொழுது  இதுகுறித்து மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,370வது சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்ற பெரும்பான்மையான மக்களின் எண்ணத்தையே மத்திய அரசு நிறைவேற்றி இருப்பதாக குறிப்பிட்ட அவர்,

மத்திய அரசின் நடவடிக்கையால் இனி திமுகவினர் காஷ்மீரிலும் சொத்துக்களை வாங்கிக் கொள்வார்கள் என விமர்சனம் செய்துள்ளார். ஆனால் வெளி வேடத்திற்காக தான் திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இதுகுறித்து கூட்டப் படுவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார். மேலும் அதிமுக எம்பிகளுக்கு முதுகெலும்பு இல்லை என டிஆர் பாலு பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் யாருக்கு முதுகெலும்பு இல்லை என்பதை வரலாறு வரலாறு உணர்த்தும் என்று தெரிவித்தார்