மக்களை வாட்டி வதைக்கும் தண்ணீர் பஞ்சம்…திமுக தொடர் போராட்டம்..!!

தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சார்பில்  கரூர் மற்றும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Image result for திமுக ஆர்ப்பாட்டம்

ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் இது குறித்து வெளியீட்டுள்ள அறிக்கையில்  குடிநீர் பிரச்சனையை போக்க கோரி ஜூன் 22-ஆம் தேதி முதல் மாவட்டம் வாரியாக திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Image result for திமுக ஆர்ப்பாட்டம்

 

அதன்படி இன்று சென்னை திருவான்மியூர் மற்றும் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை திருவான்மியூர் ஆர்ப்பாட்டத்தில் தமிழக எம்.பி தமிழச்சி சௌந்தரபாண்டியன் அவர்களும், கரூர் ஆர்ப்பாட்டத்தில் கரூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அவர்களும் பங்காற்றினர். மேலும்  கரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான திமுக தொண்டர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.