தி.மு.க. முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உடலுக்கு ஸ்டாலின் மலரஞ்சலி..!!

தி.மு.க. முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உடலுக்கு ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார். 

நேற்று நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் 3 பேரும் வீட்டில் இருந்த போது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.

Related image

அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று இரவு எடுத்துச்செல்லப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு பிரேத பரிசோதனை நடைபெற ஆரம்பித்து மதியம் 1 மணிக்கு 3 பேரு உடல்களும்  அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்களின் உடல்கள் அவரின் மகள் கார்த்திகா வீட்டில் வைக்கப்பட்டது.

Image result for Former Minister Umamakeswari

 

இவரின் வீட்டில் வைத்து பொதுமக்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் வியாபாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். இதனை அடுத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து அங்கிருந்து கார் மூலம் உமாமகேஸ்வரி இல்லத்திற்கு வந்து அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். அவருடன் பல முன்னாள் அமைச்சர்களும் வந்தனர்.

Image result for Uma Maheswari murder

மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில் 96 -இல் உமாமகேஸ்வரி மேயராக இருந்தபோது நான் சென்னையில் மேயராக பணியாற்றியபோது, முதல் பெண் மேயராக பணியாற்றியவர். என்றும்,  மக்கள் பணியை சிறப்பாக செய்தவர், அரசியல் சார்பற்ற பல்வேறு சேவைகள் செய்து கலைஞர் பாராட்டும் வகையில் நடந்து கொண்டவர் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் தற்போது இந்த ஆட்சியில்  தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள்  இதுபோல நடைபெற்று வருகிறது இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.