பாஜகவில் DMK ஸ்லீப்பர் செல்…! வீழ்ச்சியை சந்திக்கும் கட்சி…. குண்டை தூக்கி போட்ட காயத்ரி!!

தமிழக பாஜக மாநில தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் தமிழக பாஜகவில் அடுத்தடுத்து பல அதிரடி மாற்றம் ஏற்பட்டது. யாருமே எதிர்பார்க்காத வகையில் பெரிய பெரிய தலைமை பொறுப்பில் உள்ளவர்களின் குறைபாடுகளை சரிசெய்து, கட்சியை தமிழகம் முழுவதும் வளர்த்தெடுக்கும் வகையில் மாநில தலைவர் அண்ணாமலை செயல்பட்டு வந்தார். பல போராட்ட அறிவிப்பு வெளியிட்டார்.

குறிப்பாக அண்ணாமலையில் செயல்பாடுகளால் மேல்மட்ட தலைவர்களோடு மோதல் போக்கு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே பல்வேறு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டன. அதே நேரத்தில் அண்ணாமலைக்கு எதிரான செயல்பாடுகளும் கட்சிக்குள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. இதன் தொடர்ச்சியாகவே அண்டை மாநில பிரிவு தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தபோதிலும் அவர் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் அடுத்தடுத்து கருத்துக்களை ட்விட்டர் வாயிலாக பகிர்ந்து வந்தார். இதனால் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட  காயத்ரி ரகுராம் அண்ணாமலை அண்ணாமலைக்கு எதிராக நேரடியாக மோதல் போக்கில் ஈடுபட தொடங்கி உள்ளார்.

அண்ணாமலை ஏதேனும் கருத்து சொன்னாலும் சரி, ஏதேனும் அறிவிப்பு வெளியிட்டாலும் சரி, ஏதேனும் முடிவெடுத்தாலும் அதற்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டு வரும் அவர் சற்றுமுன்,

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட்டு தங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. இடைத்தேர்தல் பொருத்தவரை பணத்தை கொட்டி ஆளுங்கட்சியினர் வெல்வார்கள் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதை தனது ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்து, அண்ணாமலையின் ஆளுங்கட்சிக்கு இலவச பிரச்சாரம். ஒருவேளை ஸ்லீப்பர் செல் அவராக இருக்கலாம்.. என்ன ஒரு வீழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply