வாக்காளர்களுக்கு நன்றி “அரவக்குறிச்சி சென்ற ஸ்டாலின்” புதுமண தம்பதிக்கு ஆசிர்வாதம்..!!

 திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க அரவக்குறிச்சி சென்ற போது அங்கு புதுமண தம்பதிக்கு ஆசிர்வாதம்  வழங்கினார்.

சமீபத்தில் நடந்து முடிந்த  மக்களவை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 38 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் சட்ட பேரவை  இடைத்தேர்தலிலும் திமுக 13 தொகுதிகளை கைப்பற்றியது. திமுக கைப்பற்றிய தொகுதிகளில் கட்சியில் தன்னை இணைத்து கொண்ட செந்தில் பாலாஜி போட்டியிட்ட அரவக்குறிச்சி தொகுதியும் ஒன்றாகும்.

Related image
இந்த நிலையில், வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்க்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அரவக்குறிச்சி தொகுதிக்கு சென்றுள்ளார். ஸ்டாலின்  இன்று காலை புங்கம்பாடி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள ஒரு மண்டபம் ஒன்றில் திருமணம் செய்து கொண்ட ஒரு புதுமண தம்பதியினர், ஸ்டாலின் வந்த இடத்திற்கு நேரில் வந்து அவரிடம் ஆசிர்வாதம் பெற்றனர். அதை தொடர்ந்து  அவர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.  பின்னர் ஸ்டாலின், தொடர்ந்து பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.