“பதவியிலிருந்து விலக வேண்டாம்” முக ஸ்டாலின் வேண்டுகோள்..!!

ராகுல் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. ஆனால் காங்கிரஸ் 52 இடங்கள் மட்டுமே வென்று மோசமான தோல்வியடைந்தது. இதனால் காங்கிரஸ்  தலைவர் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகுவதாக அறிவித்தார். இதற்க்கு காங்கிரஸ் செயற்குழு மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த்தும்  ராகுல் காந்தி பதவி விலக கூடாது என்று கூறினார்.

Image result for DMK leader Stalin requested him not to step down as Congress president.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகுவதாக எடுத்த முடிவுக்கு, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அவர் ராகுல் காந்தியிடம் பேசியதாவது காங்கிரஸ் தலைவராக தொடருங்கள். காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.