இலங்கை தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை மோடி பெற்றுத்தர வேண்டும்” – ஸ்டாலின் கோரிக்கை.!!

இலங்கை தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை மோடி பெற்றுத்தர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது, “ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு செய்வது எனது முன்னுரிமை இல்லை” என்றும், “பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்திற்கு எதிராக, ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க இயலவில்லை” என்றும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச “தி இந்து” ஆங்கில பத்திரிகையில் பேட்டி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

Image result for ஸ்டாலின்

“இலங்கையில் வாழும் மக்கள் அனைவரையும் சமமாகக் கருதுகிறேன்” என்று கூறிய இலங்கை அதிபர், இந்திய பிரதமரைச் சந்தித்த பிறகு, இப்படி பேட்டி அளித்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது. பெரும்பான்மை, சிறுபான்மை என்று பிளவுபடுத்தி பிரித்துப் பேசுவது, அவர் மனதை எது ஆட்கொண்டுள்ளது என்பதற்கான அறிகுறியே தவிர, ஜனநாயகத்தைப் போற்றுவதாகாது.

Image result for ஸ்டாலின்

பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட்டு, இலங்கை தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கிடைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

“ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு செய்வது எனது முன்னுரிமை இல்லை" என்றும், "பெரும்பான்மை சிங்கள மக்களின்…

Gepostet von M. K. Stalin am Samstag, 30. November 2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *