திமுகவினர் தான் கெலும்பு இல்லாதவர்கள் அவர்களுக்கு எங்களை சொல்ல என்ன தகுதி இருக்கின்றது என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டு காஷ்மீரை 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மீது திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசும்போது அ.தி.மு.க மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குறுக்கிட்டுப் பேச முயன்றார்.

அப்போது ஆத்திரமடைந்த டி.ஆர்.பாலு, ஏய்.. முதுகெலும்பு இல்லாதவர்கள் பேசக்கூடாது.உட்காரு,நாடாளுமன்றம் முதுகெலும்பு உடையவர்களால் நிரம்பியது. உங்களைப் போன்றவர்களுக்கானது கிடையாது எனக் கூறினார். இதற்க்கு தமிழக , கேரள MP-க்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.இது குறித்த கேள்விக்கு செய்தியாளர்களுக்கு பதிலளித்த தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் ,கச்சத்தீவை சிவப்பு கம்பளம் விரித்து தாரை வார்க்க காரணமாக இருந்தவர் அன்றைய முதல்வர் கருணாநிதி. அவர்கள் தான் முதுகெலும்பு இல்லாதவர்கள் இவர்களுக்கு பேச என்ன தகுதி இருக்கின்றது என்று விமர்சனம் செய்தார்.