தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். குறிப்பாக மதுவிலக்கு மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர்கள், நண்பர்கள், உறவினர்களின் நண்பர்கள் – நண்பர்களின் நண்பர்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி எனது வீட்டிலோ, எனது அலுவலகத்திலோ அல்லது எனக்கு சொந்தமான எந்த ஒரு இடத்திலும் கூட இந்த சோதனை நடைபெறவில்லை. முழுமையான சோதனை நடைபெற்ற பிறகு நான் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் தருகிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் கடந்த சில நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டி வரும் வீடு என சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது தொடர்பாக பேசிய அவர், அது எனக்கு சொந்தமானது அல்ல. எனது தம்பியின் மனைவியின் அம்மா தம்பி மனைவிக்கு தானமாக கொடுத்த இடம். அதில் தான் வீட்டு வேலை நடைபெறுகிறது .
கடந்த சில வருடங்களாக நான் எந்த சொத்தையும் வாங்கவில்லை என்று விளக்கம் அளித்து இருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கத்தை விமர்சிக்கும் வகையில் பாஜக ஆதரவாளர்கள், அதிமுகவினர் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் #பத்துரூபா_பாலாஜி என்ற ஹேஷ்டாக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சம்பவத்தை குறிப்பிட்டு, பாஜகவினர் – அதிமுகவினர் சமூக வலைத்தளமான ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இதில் திமுக எதிர்ப்பு மனநிலையில் உள்ள பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருவதால் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றும் வேதனையில் உள்ளதாக திமுக தொண்டர்கள் புலம்புகின்றனர்.