திமுக குடும்ப கட்சி ”ஒரே ட்வீட்” உதயநிதி ஸ்டாலின் பதிலடி….!!

திமுக குடும்ப கட்சி என்று விமர்சிப்பவர்களுக்கு ஒரே ட்வீட்_டில் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு கடந்த ஜூன் 4_ஆம் தேதி வழங்கப்பட்டது.

Image

இதையடுத்து திமுக குடும்ப கட்சி , அது ஒரு கம்பெனி என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதையெல்லாம் பெரிதுபடுத்ததாத உதயநிதி தன்னுடைய அரசியல் நகர்வில் தொடர்ந்து பயணித்து வந்தார். இந்நிலையில் இன்று திமுகவின் மாவட்ட , மாநகர மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்ற இளைஞரணி கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

Image

இன்று மாலை முதல் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இளைஞரணியை வலுப்படுத்துவது குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது.மாலை கூட்டம் முடிந்ததும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்து குடும்ப அரசியல்’ என்பார்கள். ஆம், இதுதான் என் குடும்பம் என்று பதிவிட்டு ட்வீட்_செய்துள்ளார். இது தன்னை விமர்சிப்பதற்கு பதிலடி பதில் என்று திமுகவினர் தெரிவிக்கின்றனர்.