திமுகவின் தேர்தல் அறிக்கை…… ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்…!!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை இறுதி செய்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் .

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்காக திமுகவில் டி ஆர் பாலு தலைமையிலான குழு அமைக்கப்பட்டு இருந்தது அந்தக் குழுவில் ஆர் ராசா , கனிமொழி  துரைசாமி போன்றவர்கள் தீவிரமான பணிகளில் ஈடுபட்டு வந்தனர் . இந்நிலையில் இந்தக்குழு  தேர்தல் அறிக்கையை தயார் செய்து கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் திமுக தலைவர் முக.ஸ்டாலினிடம் ஒப்படைத்தது . இந்நிலையில் தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் வாசித்து அதில் சில முக்கிய அம்சங்களை  சேர்த்து  இன்றைய தினமே இறுதி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது .

Image result for அண்ணா அறிவாலயம்

அந்த வகையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில்  ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகின்றது . இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் அறிக்கை  குழுவின் தலைவர்  டி.ஆர் பாலு , ராசா துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி  மற்றும் பொன்முடி போன்றோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். திமுக_வின் தேர்தல் அறிக்கையை பொருத்தவரை முழுக்க முழுக்க ஏழை மற்றும் நடுத்தர மக்களை கவரும் வகையில் மட்டுமில்லாமல் தமிழக உரிமை மக்களின் உரிமை சார்ந்த பிரச்சனைகளிலும் எடுக்க இருக்கக்கூடிய  நிலைப்பாடு , வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் திட்டம் உள்ளிட்டவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.