திமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது….!!

திமுக மாவட்ட செயலாளர்கள் ,  MLA  மற்றும் M.P_க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகின்றது.

சென்னை அண்ணா அறிவாலயம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது . வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது . இந்த நிலையில் தான் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்பிக்களுடனான  ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று  வருகின்றது .

இந்த ஆலோசனை கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பொருளாளர் , அமைப்பு செயலாளர் மற்றும் துணை பொதுச் செயலாளர் முன்னிலையில் நடைபெறுகின்றது . தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய 65 மாவட்ட செயலாளர்கள் , திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4 எம்பிக்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு  கொடுக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலையொட்டி மேற்கொள்ளப்படும் வேண்டிய பணிகள் குறித்த விஷயங்கள் ஆலோசிக்கப்படுகிறது , தொகுதிவாரியாக மேற்கொள்ள வேண்டிய பிரச்சாரங்கள் மற்றும் பிரச்சார உத்திகள் ,  மாவட்ட வாரியாக பிரச்சாரங்கள் எந்தெந்த தேதியில் நடைபெற வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட இருக்கிறது .