திமுக 33 ……பாஜக 279 ….. டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் தகவல்…!!

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்குமென டைம்ஸ் நவ் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி தொடங்குகி 7 கட்டமாக நடைபெறுகின்றது. மேலும் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தான் கருத்துக் கணிப்புகள் வெளியிட முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், பல்வேறு தரப்பினரும் தங்ளின் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டைம்ஸ் நவ்-விஎம்ஆர் நடத்திய  கருத்துக் கணிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அந்த கருத்துக் கணிப்பின் படி இந்தியாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 279 இடங்களையும் , காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 149 இடங்களையும் கைப்பற்றும் என்றும், இந்த இரண்டு கூட்டணியிலும் இல்லாத கட்சிகள் 115 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 53.12 சதவீத வாக்குகள் பெற்று 33 பாராளுமன்ற தொகுதிகளையும் , அதிமுக கூட்டணி 39.61 சதவீத வாக்குகள் 6 பாராளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றுமென்று கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.