ஹரியானா மாநிலத்தில் மஞ்சீத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது விவாகரத்து ஆகியுள்ளது. அதாவது கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனதாக கூறப்படும் நிலையில் அவர் தன் மனைவியுடன் விவாகரத்து ஆனதை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தன்னுடைய மனைவியுடன் விவாகரத்து ஆனதை அவர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதோடு தன் மனைவியைப் போன்ற ஒரு உருவ பொம்மையை அருகில் வைத்து அதற்கு மாலை போட்டு அலப்பறை செய்கிறார். மேலும் அவர் விவாகரத்து ஆனதை கொண்டாடும் விதமாக அந்த பொம்மையுடன் பேசுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலர் அதை விமர்சிக்கும் நிலையில் சிலர் அவருக்கு ஆதரவு கொடுத்து பதிவிட்டு வருகிறார்கள்.