வருகிற ஏப்ரல் 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா….? வெளியான அறிவிப்பு…!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற ஏப்ரல் மாதம் 5- ஆம் தேதி பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் பொது தேர்வுகள் மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வருகிற 5- ஆம் தேதி பொது தேர்வு இருந்தால் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பள்ளிகள், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. மேலும் வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. இதனையடுத்து மாவட்ட கருவூலம், அனைத்து சார்நிலை கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு செயல்படும். இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் மே மாதம் 6- ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அப்போது கோடை விடுமுறையில் இருக்கும் கல்வி நிறுவன மாணவ, மாணவிகளுக்கு இந்த வேலை நாள் பொருந்தாது என கூறியுள்ளார்.