சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தால்…. பெற்றோர் மீது நடவடிக்கை…. மாவட்ட ஆட்சியரின் தகவல்…!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சாலை விபத்துகளில் பெரும்பாலானவை இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களால் நடைபெறுகிறது. எனவே இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து வருபவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அப்படி ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு மோட்டார் வாகன சட்டத்தின் படி ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 3-வது முறையாக அவர்கள் பிடிப்பட்டால் ஓட்டுநர் உரிமத்தை 3 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிலையில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனத்தை ஓட்டி வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு பெற்றோர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 மாதம் ஜெயில் தண்டனையும் விதிக்கப்படும். எனவே அனைவரும் பாதுகாப்பாக வாகனத்தை இயக்கி ராணிப்பேட்டை மாவட்டத்தை விபத்து இல்லாத மாவட்டமாக மாற்ற உதவ வேண்டும் என கூறியுள்ளார்.