“பிச்சைக்காரர்களால் அதிருப்தி” பேச இயலாமல் சென்ற தமிழிசை..!!

திருவண்ணாமலையில் பாஜகவினர் பிச்சைக்காரர்களை  கட்டாயபடுத்தி பொது கூட்டத்தில் அமர வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கேலியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உறுப்பினர் சேர்க்கைக்கான பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிக்கு சென்றிருந்தார். வழக்கம் போல் பணம் கொடுத்தும் பொதுமக்கள் கூட்டத்திற்கு வராத காரணத்தினால், கட்சி நிர்வாகிகள் அங்கு உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்களை கட்டாய முறையில் அழைத்து வந்து பொது கூட்டத்தில் உட்கார வைத்து விட்டனர்.

இதையடுத்து  பாஜக கொடியை ஏற்றிவிட்டு, பொதுக்கூட்டத்தில் பேச தொடங்கிய தமிழிசை சௌந்தரராஜன் எதிரே உள்ளவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில், சில நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு சென்றுவிட்டார். பாரதிய ஜனதா கட்சியினர் அங்குள்ள பிச்சைக்காரர்களை பொதுக்கூட்டத்தில் அமரவைத்தது அப்பகுதியில் கேலியை ஏற்படுத்தியுள்ளது.