தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்பி…. திடீரென டுவிட்டர் பயோவை மாற்றிய ராகுல் காந்தி…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தி கடந்த 2019-ஆம் ஆண்டு கர்நாடகாவில் அதென்ன அனைத்து திருடர்களும் மோடியின் பெயரை பின்னால் வைத்துக் கொள்கிறார்கள் என்று கூறியதற்கு, பிரதமர் மோடியை தான் அவதூறாக பேசினார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பாஜக எம்எல்ஏ ஒருவர் தொடர்ந்து வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பு வெளியாகிய 24 மணி நேரத்திற்குள் நாடாளுமன்ற மக்களவை எம்பி பதவியிலிருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சத்தியாகிரக போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பயோவை தற்போது மாற்றியுள்ளார். அதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி என குறிப்பிட்டுள்ளார்.