”நீதிமன்ற ஊழியர்களை ஏமாற்றி” ஓட்டம் பிடித்த அலுவலர்கள்…!!

திருச்சி அருகே  ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களை ஏமாற்றிவிட்டு அலுவலர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர்.

 

திருச்சி அருகே  பூலாங்குடிகிராமத்தில் ஆதிதிராவிடர் காலனி அமைப்பதற்காக அவ்வூரைச் சேர்ந்த தியாகலிங்கம் என்பவரின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதற்காக அவருக்கு வழங்க வேண்டிய தொகை 58 லட்ச ரூபாயை வழங்காமல் இழுத்தடித்து வந்தது. இந்நிலையில் ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலகத்தை ஜப்தி செய்ய திருச்சி சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Image result for tamilnadu government office

 

இதனால் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த  நீதிமன்றம் ஊழியர்களை வேறு ஒரு அறையில் அமர வைத்துவிட்டு, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள் அலுவலகத்தை பூட்டி விட்டு வேறு வழியில் வெளியேறியதால் நீதிமன்ற ஊழியர்கள் கலெக்டரிடம் தகவல் தெரிவித்தனர். பின்பு அங்கு வந்த உதவி கலெக்டர் ஷோபா  நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.