அலறி துடித்த மாற்றுத்திறனாளி…. மலை தேனீக்கள் கொட்டி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள லோயர் பாரளை எஸ்டேட் பகுதியில் மாற்றுத்திறனாளியான மாரிமுத்து(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நடக்க முடியாமல் தனது அக்கா பழனியம்மாள் வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் ஊன்றுகோல் உதவியுடன் மாரிமுத்து அருகில் இருக்கும் பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார். நேற்று மதியம் பழைய வால்பாறை செல்லும் சாலையில் இருக்கும் கடைக்கு மாரிமுத்து நடந்து சென்றுள்ளார்.

அப்போது வனப்பகுதியில் இருந்து கூட்டமாக வந்த மலை தேனீக்கள் மாரிமுத்துவை கொட்டியது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த மாரிமுத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மாரிமுத்துவை பரிசோதனை செய்து டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.