காதலி நயன்தாராவுடன் பிறந்த நாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன்.!!

இன்று பிறந்தநாளை கொண்டாடும் இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலி நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

சிம்புவின் “போடா போடி” படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.  இவர் இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர். அதைத்தொடர்ந்து விஜய்சேதுபதியை வைத்து “நானும் ரவுடிதான்” படத்தையும், சூர்யாவை வைத்து “தானா சேர்ந்த கூட்டம்” போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தார். தற்போது நயன்தாராவை வைத்து நெற்றிக்கன் படத்தையும்  தயாரித்து வருகின்றார்.

Image

இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் விக்னேஷ் சிவனுக்கு பல்வேறு திரைத்துறை பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் அனிருத், வரலட்சுமி சரத்குமார், எஸ் ஜே சூர்யா போன்ற பல்வேறு பிரபலங்கள் ட்விட்டரில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளனர்.
Image

இன்று பிறந்தநாளை கொண்டாடும் இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலியும் பிரபல நடிகையுமான  நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இசையமைப்பாளர்கள் அனிருத், தரண் குமார் மற்றும் விக்னேஷ் சிவனின் நெருங்கிய நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.