யாரை கேட்டு விளையாடச் சென்றாய் … பிசிசிஐ-யில் சிக்கிய தினேஷ் கார்த்திக் ..!!

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஒரு அனுமதியும் இல்லாமல் விளையாட சென்றதால் பிசிசிஐ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர்  தினேஷ் கார்த்திக். இவர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் தொடரின்  துவக்க விழாவில் கலந்து கொண்டார். மேலும்  நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான கேகேஆர் அணியின் சீருடை அணிந்ததும் அணி வீரர்களின் ஓய்வறையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Related image

இந்நிலையில் அது தொடர்பாக சில புகைப்படங்களும் இணையத்தில் வலம் வருகிறது. இதனால் இந்த விவகாரம் தினேஷ் கார்த்திக்கு  எதிராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. எனவே பிசிசிஐ  தங்களிடம் உரிய அனுமதி பெறாமல் வெளி நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்டது ஏன் என்றும் , இதுகுறித்து நோட்ஸும் தினேஷ் கார்த்திக்கு அனுப்பியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகையில் ஐபிஎல்லில்  ஷாருக்கானுக்கு சொந்தமான கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக விளையாடி வருகிறார். ஆகையால் அந்த நட்பு காரணமாகவே அவர் அங்கு சென்றிருக்கலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறினர். மேலும், பிசிசிஐ தினேஷ் கார்த்தியிடம் அங்கு சென்றதற்கான முறையான காரணம் தெரிக்குமாறு நோட்டீஸில் தெரிவித்துள்ளது .