உயர்ந்தது பெட்ரோல் ….. மாற்றமின்றி டீசல் …. இன்றைய விலை நிலவரம் ….!!

இன்றைய நாளில் பெட்ரோல் விலை உயர்ந்தும் , டீசல் விலை மாற்றமின்றியும் காணப்படுகின்றது.

தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.

இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 7 காசுக்கள் அதிகரித்து  75 ரூபாய் 75 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலை நேற்றைய  விலையிலிருந்து எவ்வித மாற்றமுமின்றி 69 ரூபாய் 96 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.