உங்களுக்கு தெரியுமா…? எலும்பில்லா நாக்கு….. இதயத்தை இரண்டாக பிளக்கும் அபாயம்….!!

மனித நாக்குக்கு எலும்புகள் கிடையாது. ஆனால் அது அது ஒரு மனித இதயத்தை உடைக்கும் அளவிற்கு வல்லமை கொண்டது.

கோபத்தில் சமநிலை இழந்து நமக்கு பிடித்தமான நபர்களையே தாறுமாறாக பேசி விடுகிறோம். அவசரத்தில் வார்த்தைகளை விட்டு விடுகிறோம். இதன் மூலம் நம் மீது தீராத அன்பு கொண்டவர்கள் கூட நம்மைப் பார்த்து வெறுக்க தொடங்கி விடுவார்கள். நாம் ஒருவரை உடலளவில் காயப்படுத்தும் சமயங்களில் அதனுடைய காயம் வெளிப்புறத்தில் இருக்கும். அது காலப்போக்கில் ஆறிவிடும்.

அந்த வலியும் அதற்கான தளும்பும் மறைந்துவிடும். ஆனால் நாம் ஒருவரை வேண்டாத வார்த்தைகளை கொண்டு திட்டி காயப்படுத்தி விட்டால் அது சாகும்வரை அவர்களது மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவர்கள் நம்மை பார்க்கும் போதெல்லாம் அந்த வார்த்தைகள் ஞாபகம் வரவர எப்பேர்ப்பட்ட உறவாக இருந்தாலும் சரி விரைவில் முறியும் அபாயம் உண்டு.

ஆகவே நமக்கு பிடித்த நபர்களாக இருந்தாலும் சரி, பிடிக்காத நபர்களாக இருந்தாலும் சரி நல்ல வார்த்தைகளைப் பேசி உறவை வளர்த்துக்கொள்ள நினைப்போமே தவிர வேண்டாத வார்த்தைகளால் ஒருபோதும் வெட்டிவிட நினைக்கவேண்டாம்.

பதிவு பிடித்திருந்தால் பகிரவும் இது போன்ற பதிவுகளுக்கு செய்தி சோலையை பாலோ செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *