அடடே…! டாடா படத்தின் இயக்குனருடன் இணையும் துருவ் விக்ரம்‌….? வெளியான நியூ அப்டேட்….!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் துருவ் விக்ரம். இவர் ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு தன்னுடைய தந்தை நடித்த மகான் படத்தில் துருவ் நடித்தார். அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடிக்க இருந்த நிலையில் மாமன்னன் உதயநிதியின் கடைசி படம் என்பதால் மாமன்னன் படத்தை முடித்துவிட்டு துருவ் படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் துருவ் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது‌. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‌