எனக்கு அந்த வாய்ப்பை வழங்கியவர் தோனி….. அவரை நான் மறக்க மாட்டேன் – உருகிய கோலி…!!

தோனிக்கும் எனக்கும் இடையே நம்பிக்கையும், மரியாதையும் உள்ளதாக விராட் கோலி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்தில் நடைபெறக்கூடிய உலக கோப்பைக்கான 15 வீரர்களை இந்திய அணி தேர்வு செய்து விட்டது. இதில் ரோஹித் சர்மா, ஷிகர் தவன், தோனி, ஜடேஜா உள்ளிட்ட மூத்த வீரர்களும், புதிய வீரரான விஜய் சங்கரும் தேர்வு செய்யப்பட்டார். உலக கோப்பை தேர்வு குறித்து விமர்சனங்கள் ஒருபுறம் எழுந்து வருகிறது.

Image result for dhoni,kohli

இந்நிலையில் இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது தோனி அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை குறிப்பிட்டு பேசினார். தோனி ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டு ஆடுவார். தோனி ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்து 300 பந்துகள் வரை எவ்வாறு ஆட வேண்டும் என்று புரிந்து கொள்ளும் திறன் படைத்தவர். தோனியை பலர் விமர்சனம் செய்கின்றனர். அவரை விமர்சனம் செய்வது  துரதிர்ஷ்டவசமானது. ஸ்டெம்புக்கு பின்னால் தோனி இருப்பது எனது அதிர்ஷ்டம்.

Image result for dhoni,kohli

நான் ஆரம்ப காலத்தில் இந்திய அணியில் இடம் பிடித்த நேரத்தில்  ஒரு சில போட்டிகளில் மிகவும் மோசமாக விளையாடினேன். அந்த தருணத்தில் கேப்டனாக இருந்த தோனி எனக்கு பதில் வேறு எதாவது ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யாமல் என் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அதன் பிறகு எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை நான் சரியாக  பயன்படுத்தி சிறப்பாக செயல்பட்டேன். இளம் வீரருக்கு 3வது  வரிசையில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு அவ்வளவு எளிதில் தோனி கொடுத்து விடமாட்டார். ஆனால் தோனி எனக்கு அந்த வாய்ப்பை தந்தார். அதனால் அவரை என்றும் நான் மறக்க மாட்டேன். அவருக்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன். தோனிக்கும் எனக்கும் இடையே நம்பிக்கையும், மரியாதையும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.