ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை சொல்லி பிரசாரம்……தருமபுரி திமுக வேட்பாளர் பேட்டி…!!

திமுக கொண்டு வந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை சொல்லி பிரசாரம் செய்வோம் என்று தருமபுரி திமுக வேட்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி , இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் வேட்பாளரை அறிவித்து விட்டது.

 

Image result for தருமபுரி திமுக வேட்பாளர்

இந்நிலையில் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் போட்டியிடும் 20 நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்தார். அதில் தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் டாக்டர் செந்தில் குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது குறித்து திமுக தருமபுரி வேட்பாளர் செந்தில்குமார் தெரிவிக்கையில் ,  திமுக கொண்டு வந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஒன்றே போதும் நாங்கள் பிரசாரம் செய்ய என்று தெரிவித்தார்.