தனுஷின் “கர்ணன்” ட்ரைலர் வெளியாகாது…. படக்குழு அதிரடி முடிவு…!!

கர்ணன் ட்ரைலர் ரிலீஸ் செய்யப்படாது என்று படக்குழு அதிரடி முடிவு எடுத்துள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, லால், கவுரி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

இதற்கிடையில் வெளியான கர்ணன் படத்தின் பண்டாரத்தி என்ற பாடல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதனால் படக்குழு பண்டாரத்தி என்ற வார்த்தையை மஞ்சனத்தி என்று மாற்றியுள்ளனர். ஆகையால் ரிலீஸ் நாள் நெருங்கி வரும் இவ்வேளையில் இனி சர்ச்சைகளில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக படக்குழு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

அதன்படி படக்குழு கர்ணன் படத்தின் ட்ரைலரை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.