தன்ஷிகா படத்தில் இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்….!!

கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில், தன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘யோகி டா’. இந்த  படத்தில் தன்ஷிகாவுடன் இணைந்து கபீர் துஹான் சிங், மனோபாலா, சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த கதை காதல் நிறைந்த ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது.

Image result for தீபக் தேவ்

ஜட்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரியும், ராஜ்குமாரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைக்கும் தீபக் தேவ், மலையாளத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘லூசிபர்’ படத்திற்கு இசையமைத்து பிரபலமானவர். இந்த படத்திற்கு கவுதம் கிருஷ்ணாவும், ஹிமேஷ் பாலாவும் இணைந்து வசனம் எழுதுகின்றனர். இப்படத்திற்கு எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பளராக ஜி.சசிகுமாரும், ஸ்டண்ட் இயக்குனராக கணேஷும் பணியாற்றி வருகின்றனர்.