தனுஷ் நடிக்கும் “நானே வருவேன்”…. இந்த அளவுக்கு வேலை செஞ்சதில்ல…. செல்வராகவன் உழைப்பு…!!

இந்த அளவிற்கு முதற் கட்ட பணிகளில் ஒருபோதும் பணியாற்றியதில்லை என்று இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார்.

வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படம் “நானே வருவேன்”. செல்வராகவன் இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் நானே வருவேன் படத்தைப் பற்றி கூறியதாவது, இந்த அளவிற்கு முதற்கட்ட பணிகளில் எப்போதும் பணியாற்றியது இல்லை.

தற்போது நானே வருவேன் திரைப்படத்திற்கான படபிடிப்பு தயாராகி வருகிறது என்று கூறியுள்ளார். இவரின் இந்த தகவல் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் கூட்டணியில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.