ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கும் படத்திற்கான டைட்டிலை தனுஷ் நாளை வெளியிட உள்ளார்.
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான ஜீவா மற்றும் அருள்நிதி ஒரே படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. பின் இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும் , அருள்நிதிக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கரும் நடிக்கிறார் . மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கர், பாலசரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா போன்ற நடிகர்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது .

இந்த படத்தை மாப்பிள்ளை சிங்கம் படத்தை இயக்கிய இயக்குனர் ராஜசேகர் இயக்கவுள்ளார் . இந்த படத்திற்கான டைட்டிலை நாளை காலை 11 மணிக்கு நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட உள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது .