முடிவுக்கு வந்த தடை உத்தரவு…. கோவிலில் குவிந்த கூட்டம்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!

நீண்ட நாட்களுக்கு பிறகு கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு செல்வதற்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர். இந்நிலையில் தடை உத்தரவு முடிவுக்கு வந்ததால் கோவில் வழக்கம்போல திறக்கப்பட்டது.

இதனையடுத்து விஜயதசமி தினம் என்பதால் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து குவிந்தனர். பின்னர் அவர்கள் வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்து விட்டு சென்றனர். மேலும் வேலூர் கோட்டை, ஜலகண்டேஸ்வரர் கோவில், வள்ளிமலை, ரத்தினகிரி உள்ளிட்ட கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *