மகா காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடை பெற்றுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீச்சாங்குப்பம் பகுதியில் மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 5-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் ஊர்வலம் நேற்று நடைபெற்றுள்ளது.
இதில் சேவாபாரதி விநாயகர் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்துக்கொண்டு முக்கிய தெருக்களின் வழியாக சென்று கோவிலை வந்தடைந்துள்ளனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி உள்ளனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.