திருப்பதியில் மாலை 5 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ஆலிவர ஆச்சாரம் நடைபெற உள்ளதையொட்டி பக்தர்கள் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர் .

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ஆலிவர ஆச்சாரம் நடைபெற உள்ளதையொட்டி கோவிலை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.கருவறை,ஆனந்த நிலையம்,பகல வடா  சன்னதி,யோக நரசிம்மர் சன்னதி மற்றும் வரதராஜ சுவாமி சன்னதி உள்ளிட்ட அனைத்து இடங்களும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு,பச்சை கற்பூரம்,மஞ்சள்,குங்குமம் உள்ளிட்ட மூலிகை கலவைகள் அனைத்து இடங்களிலும் தெளிக்கப்பட்டன.இதையடுத்து கோவில் திருமஞ்சனத்தை  ஒட்டி இன்று சர்வ தரிசனம்,திவ்ய தரிசனம், குழந்தையுடன் பெற்றோர்கள்   செல்லும்  தரிசனம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நுழைவு தரிசனம் ஆகியவை ரத்து  செய்யப்பட்டுள்ளன.

Image result for திருப்பதி ஏழுமலையான் கோவிலில்

இலவச தரிசனத்தில்  பக்தர்கள் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.  மேலும் சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு 1:31 முதல் 4:29 மணி வரை நடைபெற உள்ளதால் மாலை 5 மணிக்கு நடை அடைக்கப்பட்டு,மீண்டும் நாளை காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட இருக்கிறது . ஆனால் சம்பிரதாய முறைப்படி பழைய கணக்கு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால்  நாளை காலை 11 மணிக்குப் பிறகே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.