அத்திவரதர் தரிசனம்- நீட்டிக்க கோரிய மனு தள்ளுபடி…!!

அத்திவரதர் தரிசனம் நாட்களை நீடிக்க கோரிய பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு இந்து மகாசபை சார்பிலும் , மற்றொருவர் தரப்பிலும் இரண்டு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.அதில் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீடிக்க வேண்டும் என்றும் ,  48 நாட்கள் மட்டும் தான் அத்திவரதரை தரிசிக்க வேண்டுமென்றஆகமவிதி ஏதும் இல்லாத நிலையில் அதை நீட்டிக்கலாம் என்றும் , மற்றொரு வழக்கில் தனக்கான வழிபாட்டு உரிமை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அனைவரும் தரிசிக்கும் முறை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

Image result for அத்திவரதர் தரிசனம்

இந்த இரண்டு மனுக்களும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி  மணிக்குமார் , சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது அரசுத் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி ஏற்கனவே 48 நாட்களாக தரிசனத்துக்கு வைத்துள்ளதாகவும் , இதை மேலும் நீட்டிக்க முடியாது. இது கோவில் நிர்வாகமும் , இந்து சமய அறநிலை துறையும் எடுத்த முடிவு , மத வழிபாட்டு முறைகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்று தெரிவித்தார்.அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மத வழிபாடு நடை முறையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி தரிசனம் நீட்டிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.