பதவிக்கு ஆசை….. தன்னை தானே வெட்டி கொண்டு நாடகம்….. திருப்பூரில் பரபரபரப்பு….!!

உயர் பதவிக்கு ஆசைப்பட்டு இந்து மக்கள் கட்சியின் பிரமுகர் தன்னைத்தானே வெட்டி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் நந்தகோபால் என்பவர் தன்னை மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் வெட்டி விட்டு தப்பி சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்த தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

பின் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டபோது திடுக்கிடும் தகவல் ஒன்று தெரியவந்தது. அதில்,  இந்து மக்கள் கட்சியில் உயர் பதவி வாங்குவதற்காக தான் பொய் கூறியதாகவும், என்னை யாரும் வெட்டவில்லை என்னை நானே வெட்டிக் கொண்டேன் என்றும் அந்த நபர் விசாரணையில் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.