குறைந்து மதிப்பிட்டு விட்டேன்… தவறை ஒப்புக்கொண்ட டிரம்ப்..!!

கொரோனா வைரஸின் தீவிரத்தை அறியாமல் அதை குறைத்து மதிப்பிட்டு விட்டேன் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கப் பத்திரிகையாளர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொற்று நோயை கண்டறியும் விதம் குறித்து புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார். இது வரும் 15ம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் அதிலிருந்து சில தகவல்களை சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் டிரம்ப் தொற்றுநோயை கையாண்டது பற்றிய மதிப்பீடு மட்டுமல்ல, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மாட்டிஸிடமிருந்து அவரது நடத்தை மற்றும் டிசம்பர் முதல் ஜூலை வரை டிரம்ப் இருக்கும், உட்வார்டுக்கும் இடையேயான 18 ஆன் ரெக்கார்ட் நேர்காணல் அடிப்படை கொண்டதாக உட்வார்டுடின் இந்த புத்தகம் இருக்கும். இதுகுறித்து ட்ரம்ப் கூறியது தொற்றுநோய் மற்றும் பொருளாதார பேரழிவிலிருந்து நான் வெற்றி பெறுவேன்.

பீதியை ஏற்படுத்த கூடாது என்பதற்காக ஆரம்பத்திலிருந்து கொரோனா வைரஸ் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்டதாகக் கூறினார். நான் ஒரு உற்சாக வீரர். எங்கள் நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். மக்களை பயன்படுத்த விரும்பவில்லை. உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனா அனுப்பியது. இது ஒரு அருவருப்பான, பயங்கரமான சூழ்நிலை என்று கூறினார். மற்றொரு பேட்டியில் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ ஆடியோ கிளிப் வெளியிட்டு இந்த கொரோனா வைரஸ் காய்ச்சலை விட ஆபத்தானது. அது காற்றில் பரவக்கூடியது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *