பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாததை கண்டித்து… அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் நகராட்சி அலுவலகம் முன்பாக நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  ராசிபுரம் சங்க தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாததை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.