நாவை சுண்டியிழுக்கும் சுவையான  சேப்பங்கிழங்கு ரோஸ்ட் !!!

சுவையான  சேப்பங்கிழங்கு ரோஸ்ட்.

தேவையான பொருட்கள் :

சேப்பங்கிழங்கு – 1/4 கிலோ

புளிக்கரைசல் – 2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 3

பெருங்காயத்தூள் – 1/4  டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

கடுகு – 1/4 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1/2  டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை –  தேவையான  அளவு

சேப்பங்கிழங்கு க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் சேப்பக்கிழங்கை அவித்து  தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும் . பின்னர் காய்ந்த மிளகாய் , பெருங்காயத்தூள், புளிக்கரைசல் மூன்றையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, கொள்ளவேண்டும். சேப்பங்கிழங்கு துண்டுகளின் மீது தேவையான உப்பு மற்றும்  அரைத்த கலவையை தடவி  ஊற  விட வேண்டும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு , கறிவேப்பிலை   மற்றும் சேப்பங்கிழங்கு துண்டுகள் சேர்த்துக் கிளறி , ரோஸ்ட் செய்து இறக்கினால் சுவையான  சேப்பங்கிழங்கு ரோஸ்ட்  தயார் !!!