குழந்தைகள்  விரும்பும்  சுவையான  உருளைக்கிழங்கு போண்டா !!!

குழந்தைகள்  விரும்பும்  சுவையான  உருளைக்கிழங்கு போண்டா செய்யலாம் வாங்க .

தேவையான  பொருட்கள் :

கடலை மாவு – 250 கிராம்

பல்லாரி  – 2

பச்சை மிளகாய் – 2

உருளைக்கிழங்கு – 250 கிராம்

 

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

கடுகு – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் –  தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

Potato க்கான பட முடிவு

செய்முறை:

முதலில்  உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் , எண்ணெய் ஊற்றி கடுகு , வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும் . பின்  இதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து , பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி , கடலை மாவில் தோய்த்து,  எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் சுவையான  உருளைக்கிழங்கு போண்டா  தயார் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *