தயிர் சாதத்துக்கு ஏற்ற சூப்பர் சைடிஷ்  மாங்காய் பச்சடி!!!

மாங்காய் பச்சடி
தேவையான  பொருட்கள் :
மாங்காய் – 2
பச்சை மிளகாய் – 6
வெங்காயம் – 1
மஞ்சள்தூள் –  1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
சர்க்கரை – 1/4  கப்
கடுகு –  1  டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1  டீஸ்பூன்
எண்ணெய் –  தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மாங்காய் க்கான பட முடிவு
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு , உளுத்தம்பருப்பு சேர்த்து, வதக்கி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க  வேண்டும். பின்  அதில் நறுக்கிய மாங்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து  வதக்கி,  தண்ணீர் சேர்த்து மூடி கொதிக்கவிடவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து  கெட்டியானதும் இறக்கி பரிமாறினால் சுவையான மாங்காய் பச்சடி தயார் !!!